உ.பி ஒரேகுடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு..

802808 pea - 2026

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளி ராகுல் வர்மாவுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சந்திர கோயல். இவரது வீட்டில் கடந்த 2013-ம் ஆண்டு கார் டிரைவராக வேலை செய்து வந்தவர் ராகுல் வர்மா. இதனிடையே, 2013 மே 21-ம் தேதி தொழிலதிபர் சதீஷ் வீட்டில் இருந்து 4.50 லட்ச ரூபாய் பணத்தை ராகுல் திருடியுள்ளார். இதுகுறித்து அறிந்த சதீஷ் தனது டிரைவர் ராகுல் வர்மாவை வேலையை விட்டு நீக்கி, போலீசிலும் புகார் அளித்தார்.

இதனால், ஆத்திரமடைந்த ராகுல், மே 21 நள்ளிரவு இரவு சதீஷ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அங்கு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தொழிலதிபர் சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் என மொத்தம் 7 பேரை ராகுல் கூர்மையான ஆயுதத்தை கொண்டு கொடூரமாக கொலை செய்துள்ளான். தொழிலதிபர் சதீஷ் சந்திர கோயல், அவரது மனைவி மஞ்சு ரானி, மகன் சச்சின், மருமகள் ரேகா, பேத்தி மேஹா, பேரன்கள் ஹனி, அமென் என மொத்தம் 7 பேரையும் ராகுல் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றான்.

இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி ராகுல் வர்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஒரேகுடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் ராகுல் வர்மா குற்றவாளி என காசியாபாத் கூடுதல் அமர்வு கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

மேலும், குற்றவாளி ராகுல் வர்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ராகுல் வர்மாவுக்கு 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராகுல் வர்மா சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories