டெல்லி விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் மீது இன்று கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிகார் மாநிலம் பாட்னா கிளம்புவதற்காக இன்று காலை இண்டிகோ விமானம்-6இ-2022 தயாராக இருந்தது.

இந்நிலையில், இண்டிகோ விமானம் நின்று கொண்டிருந்த பகுதிக்கு அருகே சென்ற கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான மாருதி கார் ஒன்று, இண்டிகோ விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் விமானத்திற்கோ, பயணிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், விமானம் திட்டமிட்ட நேரத்தில் பாட்னா புறப்பட்டுச் சென்றதாகவும் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.மேலும், இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிக முக்கிய விமான நிலையத்திலேயே ஊழியர்களின் கவனக் குறைவால் இதுபோன்ற விபத்து நடந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தில்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதா என்பதை ஆராய கோரிக்கை விடுத்து வருகின்றனர்.