வேலூரில் தந்தை பலாத்காரம் செய்ததில் சிறுமிக்கு குழந்தை..

Published:

images 34 - 2026

வேலூரில் தந்தை பலாத்காரம் செய்ததில் சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூரில் தந்தை பலாத்காரம் செய்ததில் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த 45 வயது நபர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவரது மனைவி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அந்த சிறுமி அருகில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்தப்பகுதியில் வசிக்கும் தனது பாட்டியுடன் அவள் தங்கி வசித்து வந்தாள்.

தினமும் அங்கிருந்து சிறுமி தனது தந்தைக்கு சாப்பாடு கொண்டு செல்வது வழக்கம். இந்தநிலையில் மாணவி திடீரென கர்ப்பமாகி உள்ளார். அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது சிறுமிக்கு திருமணம் ஆனதா? என டாக்டர்கள் விசாரித்துள்ளனர். அதற்கு தந்தை மற்றும் உறவினர்கள் தரப்பில் இருந்து முறையான பதில் தெரிவிக்கவில்லை.

சிறுமிக்கு திருமணம் ஆகவில்லை என்பது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று 13 வயது சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை அவரது தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததும், இதன் மூலம் சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img