கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திமுக காவிரி விவகாரத்திற்காக போராட்டம் செய்தபோது ஒருசிலர் ஸ்டாலினுடன் இணைந்து செல்பி எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை ஸ்டாலின் அடித்த வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவிரிக்காக போராடி கொண்டிருக்கும்போது செல்பி அவசியமா? என்று ஸ்டாலின் தொண்டர்களிடையே கூறியதாவும் செய்தி வெளியானது.

இந்த நிலையில் நேற்று ஸ்டாலின் நடைப்பயணம் மேற்கொண்டபோது சில இளம்பெண்கள் அவருடன் செல்பி எடுக்க முயற்சி செய்தனர். அப்போது அவர்களுக்கு ஸ்டாலின் போஸ் கொடுத்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது பெண்களுடன் மட்டும் செல்பி எடுக்கலாமா? என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர்.




