புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 20-வகையான 5 டன் பூக்களால் அபிஷேகம் ..

புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 20-க்கும் மேற்பட்ட வகையான சுமார் 5 டன் பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

5 டன் பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சையை ஆண்ட சோழபேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டு திசைகளிலும் அஷ்டசக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைய பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது. இந்த சிலையில் கோடை காலங்களில் முத்து, முத்தாக வியர்வை துளிகள் வெளியாகும் என்பது ஐதீகம். மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்மனுக்கு பூக்களை தவிர வேறு எந்தவித அபிஷேகமும் செய்வதில்லை. இதனால் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தி பெற்றவை. அந்தவகையில்,

இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா ஆடி 3-வது வெள்ளிக்கிழமையில் நடந்தது. இதையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து அம்மன் உருவப்படங்களுடன் கூடிய ரதங்கள் புறப்பட்டு தஞ்சை பெரியகோவிலுக்கு நேற்றுமுன்தினம் மாலை வந்தன. அங்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அனைத்து ரதங்களும் புறப்பட்டன.

பக்தர்கள் ஏராளமானோர் பூக்கூடைகளை கொடுத்தனர். இந்த பூக்கூடைகள் அனைத்தும் ரதத்தில் வாங்கி வைக்கப்பட்டன. பின்பு மேளதாளங்கள் முழங்க இந்த ரதங்கள் தஞ்சையில் உள்ள முக்கியவீதிகள் வழியாக சென்று புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. நேற்று காலை மாரியம்மன்கோவில் தேரோடும் முக்கிய வீதிகளில் அம்மன் ரதங்கள் வலம் வந்தன. ரதத்தின் முன்பு பெண்கள், சிறுமிகளின் கோலாட்டம் நடைபெற்றது. பின்பு புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 20-க்கும் மேற்பட்ட வகையான சுமார் 5 டன் பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுக்ரவார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, அன்னதான அறக்கட்டளை, கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.

1741815 punnai - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories