
தமிழகத்தில் ஜி.எஸ்.டி. காரணமாக ரூ.100க்கு விற்ற தயிருக்கு 5 சதவீதம் வரி விதித்தால் ரூ. 105க்கு விற்க வேண்டும். ஆனால் திமுக., அரசு ரூ. 120க்கு விற்கிறது. இந்த 15 ரூபாய் கமிஷன் யாருக்கு செல்கிறது என பாஜக., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கும் பாஜக., மாநில மகளிரணிக்கான 2வது நாள் பயிற்சி முகாமில் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்தி உற்சாகமாக கொடி அசைக்கும் நிகழ்ச்சியை பாஜக., மகளிரணி தேசிய தலைவர் வானதி எம்.எல்.ஏ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விழாவில் எச்.ராஜா பேசியபோது, ஸ்டண்ட் கலைஞர் கனல் கண்ணன் ஒரு கருத்து தெரிவித்து இருந்தார். மிரட்டுவதற்காக போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அவருக்கு கருத்து உரிமை கிடையாதா. அதேசமயம் சுவாமி நடராஜரை இழிவுபடுத்தி யூடியூப் சேனலில் வெளியிட்டவரின் வீட்டுக்கு செல்ல போலீசிற்கு பாதை தெரியவில்லையா.
தமிழகத்தில் ஜி.எஸ்.டி. காரணமாக ரூ.100க்கு விற்ற தயிருக்கு 5 சதவீதம் வரி விதித்தால் ரூ. 105க்கு விற்க வேண்டும். ஆனால் தி.மு.க., அரசு ரூ. 120க்கு விற்கிறது. இந்த 15 ரூபாய் கமிஷன் யாருக்கு செல்கிறது
தி.மு.க.,வுக்கு சாதகமாக போலீஸ் இருப்பதால் தமிழகதத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இது கார்ப்பரேட் அரசாங்கம்.. என்றார்.