mcms 3 - 2026

வரும் ஆக15 முதல் ஜெயிலர் படப்பிடிப்பு -ரஜினிகாந்த்

சற்றுமுன்

ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழகத்தை மிகவும் நேசிக்கிறார்.என நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த், ஆளுநர் ஆர்.என். ரவி யை சந்தித்து பேசினார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஆளுனருடன் 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். காஷ்மீரில் பிறந்து வட இந்தியாவில் வளர்ந்தவர் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழகத்தை மிகவும் நேசிக்கிறார். தமிழக ஆன்மீக உணர்வு ஆளுநரை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நேர்மை, தமிழர்களின் கடின உழைப்பு, அவர்களின் ஹானஸ்டியை பிடித்திருப்பதாக ஆளுநர் கூறினார்.

தமிழ்நாட்டிற்கு தன்னால் முடிந்த அளவுக்கு நல்லது செய்ய தயாராக இருப்பதாக ஆளுநர் என்னிடம் கூறினார். ஆளுநரிடம் அரசியல் பற்றி விவாதித்தேன்; ஆனால் அதை பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது. மேலும் அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு மீண்டும் அரசியலுக்கு வர விருப்பமில்லை என பதிலளித்தார் தொடர்ந்து பேசிய அவர்; ஜிஎஸ்டி குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆளுநருடன் சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசவில்லை, வரும் 15 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கும் இவ்வாறு கூறியுள்ளார்.

mcms 3 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.