ரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் FBI ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.
VPNFilter என்று அழைக்கப்படும் இந்த மால்வேரால் இதுவரை 5 லட்சம் கருவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கணினி பயன்படுத்துவோர் தங்கள் Routerகளை Re-Boot செய்யுமாறு FBI அறிவுறுத்தியுள்ளது.
Re-Boot செய்யும்போது Router-ன் Memory அழிக்கப்படுவதால் தற்காலிகமாக மால்வேர் தொற்று அகற்றப்படுகிறது. என்றாலும் முழுவதுமாக இந்த மால்வேரை அகற்ற Router-களை Factory Settings ரீசெட் செய்வது ஒன்றுதான் வழியாகும்.



