நள்ளிரவில் தமிழக கேரளா மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டடுள்ளதால் குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
கனமழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
