மழையால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து…

Published:

விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்வதால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

images 60 - 2026

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. அதேபோல வருகிற 11-ந் தேதி பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடக்கிறது. வழக்கமாக பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது வழக்கம்.

இந்தநிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதாலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையின் குறுக்கே செல்லும் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். எனவே பக்தர்கள் யாரும் அனுமதி ரத்து செய்யப்பட்ட நாட்களில் மலை அடிவார பகுதியான தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு வர வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img