44 வது செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா கோலாகலம்…

Published:

1743749 mks2 - 2026

44 வது செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வண்ணமயமான பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் செவ்வாய் கிழமை மாலை தொடங்கி நடைபெற்றது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இதில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-மந்திரிகளின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் கியூபிக் நிறங்களை ஒன்று சேர்த்து சிறுவர்கள் அசத்தினர். இந்தியாவின் இதயத் துடிப்பு (ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா) என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, நவீன்குமார், கீ போர்டு ஸ்டீபன் தேவசிஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் அசத்தினர். அதன்பின், டிரம்ஸ் வாசித்த படியே மேடையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இருந்த இருக்கை அருகே சென்றார். அப்போது முதல்வர் ஸ்டாலின் எழுந்து நின்று சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து அசத்தினார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
Chess olympaid udai.jpeg - 2026

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிறந்த அணிகளுக்கு விருது மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டன. 

44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில், கலைஞர்களின் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறந்த அணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

சிறந்த சீருடை அணிந்த அணிக்கான விருது

சிறந்த சீருடை அணிந்தத அணிகளுக்கு விருது வழங்கப்பட்டது. அங்கோலா, ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் இந்த விருதைப் பெற்றன. திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு விருது வழங்கினார்.

ஆண்களுக்கான சிறந்த சீருடை

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்களுக்கான சிறந்த சீருடை விருது மங்கோலியா, உஸ்பெகிஸ்தான் நாட்டின் அணிகள்ளுக்கு வழங்கப்பட்டன.

பெண்களுக்கான சிறந்த சீருடை

சிறந்த மகளிர் அணி சீருடைக்கான விருது உகாண்டா நாட்டு அணிக்கு அறிவிக்கப்பட்டது. 

ஸ்டைலிஷ் அணி

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

டென்மார்க் அணிக்கு சிறந்த ஸ்டைலிஷ் அணி விருது வழங்கப்பட்டது.

1743757 anand1 - 2026

விழாவில் பேசிய இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமை அடைகிறேன் என சர்வதேச கூட்டமைப்பின் துணை தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும், செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img