ஆசிரியர் தகுதி தேர்வு செப்10 முதல்15ம் தேதி வரை மாற்றம்..

Published:

தமிழக ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதி, நிர்வாக காரணங்களால் மாற்றப்பட்டு செப்., 10 முதல் 15ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழக ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளுக்கான கணினி வழி தேர்வு, வரும், 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால், செப்., 10 முதல் 15ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

கணினிவழி தேர்விற்காக பயிற்சி மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்ள, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். இதுகுறித்த அறிவிக்கை, தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச் சீட்டு வழங்கும் விபரம், செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tamil News large 3096671 - 2026
ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img