- 2026

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..

சற்றுமுன்
- 2026

தமிழக மக்களுக்கும், அரசுக்கும் பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார் .

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்தியுள்ளதாக தமிழக மக்களுக்கும், அரசுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார் . 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள். என அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் உங்கள் அன்பான பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி.விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு குணங்கள்.இது போன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த தமிழகத்திற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.