தேனியில் மத்திய அரசு அமைக்கவுள்ள நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணத்தின்போது திடீரென மதிமுக தொண்டர் ரவி என்பவர் தீக்குளித்தார்.
இந்த நிலையில் தீக்குளித்த ரவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் அவர் சிகிச்சையின் பலனின்றி பலியானார். இதனால் வைகோ உள்பட மதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே காயமடைந்த ரவியின் உடல் 99% தீக்காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது



