இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் இந்த ஆண்டு மீண்டும் புத்துணர்ச்சியுடன் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கவுள்ளது. தல தோனி தலைமையிலான இந்த அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று சென்னை ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் காலை 9.30 மணியில் இருந்து நண்பகல் 12.30 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணியில் இருந்து 6 மணி வரையிலும் டிக்கெட்டுகளைப் பெறலாம்.
நபர் ஒன்றுக்க்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். ரூ.1,300., ரூ.1,500, ரூ.2,500, ரூ.4,500, ரூ.5,000, ரூ.6,500, ஆகிய கட்டணங்களிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டிக்கெட்டுக்களை www.chennaisuperkings.com, www.bookmyshow.com ஆகிய இணையதளங்களிலும் பதிவு செய்துகொள்ளலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் போட்டிகளின் விபரங்கள்:
ஏப்ரல் 10: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஏப்ரல் 20: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்
ஏப்ரல் 28: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
ஏப்ரல் 30: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ்
மே 5: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்ச் பெங்களூர்
மே 13: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன் ரைசஸ் ஐதராபாத்
மே 20: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்



