ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்து..

Published:

4954teapart0814323 - 2026

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். இதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆளுநர் தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்தியநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் பங்கேற்றார். காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். மேலும் திமுக வின் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கற்றனர்.

CM Stalin tea.jpeg - 2026
500x300 1746803 goveror - 2026

தேநீா் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை, ஆளுநா் ஆா்.என்.ரவி வரவேற்றாா். அப்போது, ஆளுநருக்கு மகாத்மா காந்தியடிகள் சிலையை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

தேநீா் விருந்து நிகழ்ச்சியில் சுமாா் 45 நிமிடங்களுக்கு முன்பாகவே ஓ.பன்னீா்செல்வம் வந்தாா். அவா் தனது ஆதரவாளா்களுடன் ஆளுநா் ஆா்.என்.ரவியுடன் சிறிது நேரம் ஆலோசித்தாா்.

பரிசு – பாராட்டு: சுதந்திர தினத்தை மையப்படுத்தி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப் போட்டிகளை ஆளுநா் மாளிகை நடத்தியது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா். மாலை 5 மணியளவில் தொடங்கிய தேநீா் விருந்து நிகழ்ச்சி, ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img