பீகார் 8 மாதமாக போலி போலீஸ் ஸ்டேசன்..

Tamil News large 3103354 - 2026

பீகார் 8 மாதமாக போலி போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலியான போலீஸ் அதிகாரி போலி ஐஏஎஸ் அதிகாரியை ,போலி சிபிஐ அதிகாரியை பார்த்திருக்கிறோம். ஆனால், போலி போலீஸ் ஸ்டேசன் பார்த்திருக்கிறீர்களா? அந்த குறையை போக்கி விட்டார்கள். பீஹார்காரர்கள். அங்கு, 8 மாதமாக போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

பீஹாரின் பங்கா மாவட்டத்தில், நகர போலீஸ் ஸ்டேசன் மற்றும் மாவட்ட எஸ்.பி., வீடு அமைந்துள்ள பகுதி அருகே விருந்தினர் இல்லம் ஒன்றில், கும்பல் ஒன்று போலியாக போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்துள்ளனர். இந்த கும்பல், டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் அணியும் சீருடை போன்றே உடையணிந்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.

இதற்காகவே அந்த விருந்தினர் மாளிகையை, போலீஸ் ஸ்டேசன் உட்கட்டமைப்பை போலவே மாற்றி அமைத்துள்ளனர். அந்த கும்பலில் சிலர் நாட்டுத்துப்பாக்கியுடன் போலீஸ் சீருடையில் வந்தவர்களை, நகர போலீஸ் அதிகாரிகள் பிடித்து விசாரித்த போது உண்மை வெளிப்பட்டது. இதனையடுத்து 2 பெண் உட்பட 5 பேரை போலி போலீஸ் ஸ்டேசன் நடத்தியதற்காக கைது செய்தனர். அதில், முக்கிய குற்றவாளி தலைமறைவானான். அவனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கிகள், போலீஸ் சீருடைகள், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்ட விண்ணப்பங்கள், போலி அடையாள அட்டை, வங்கி செக் புத்தகங்கள், மொபைல் போன்கள், ஐக்கிய ஜனதா தள மாவட்ட தலைவரின் சீல், போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. முதல்கட்ட விசாரணையில், இக்கும்பல், போலீஸ் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்து ஏமாற்றியதுடன், அரசின் திட்டப்பணிகள் நடக்கும் இடத்திற்கு சென்று விசாரணை என்ற பெயரில் மிரட்டி பணம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. கைதான இரண்டு பெண்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தலைமறைவான முக்கிய குற்றவாளி, வேலை வாங்கி தருவதாக கூறி தங்களிடம் 90 ஆயிரம் மற்றும் 55 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு போலி போலீஸ் ஸ்டேசனில் பணியமர்த்தியதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories