குருவாயூர் கோவிலில் இன்று 245ஜோடிகள் திருமணம்..

1500x900 1746448 temple - 2026
  • கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொள்வது சிறப்பை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
  • முன்பதிவு தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே சுமார் 245 ஜோடிகள் இன்று 21-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொள்வது சிறப்பை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

குறிப்பாக கிருஷ்ண ஜெயந்தி மற்றும் அதனை தொடர்ந்து வரும் நாட்களில் பலரும் திருமணம் செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி வருகிற 19-ந் தேதி கொண்டாடப்பட்டது. அதை அடுத்து வரும் இன்று 21-ந் தேதி சுபமுகூர்த்த தினமாகும்.

இன்று ஞாயிற்று கிழமை என்பதால் பலரும் 21-ந் தேதி திருமணம் செய்ய நாள் குறித்தனர். இதற்கான முன்பதிவு கடந்த 8-ந் தேதி தொடங்கியது.

முன்பதிவு தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே சுமார் 245 ஜோடிகள் 21-ந் தேதி திருமணம் செய்து கொள்ள முன்பதிவு செய்தனர்.

இதனை அடுத்து கோவில் நிர்வாகம் 2 நாட்களுக்கு முன்பு முன்பதிவை நிறுத்த முடிவு செய்தது. இதையடுத்து அன்றைய தினம் முன்பதிவு செய்ய வந்தவர்களின் பதிவுகளை ஏற்றுக்கொள்ள கோவில் நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதையடுத்து முன்பதிவு மறுக்கப்பட்டவர்களில் சிலர் கேரள ஐகோர்ட்டில் மனு செய்தனர். அதனை விசாரித்த கோர்ட்டு, குருவாயூர் கோவிலில் 21-ந் தேதி திருமணம் செய்ய விரும்புவோரின் மனுக்களை ஏற்க வேண்டும் என அறிவுறுத்தியது.

மேலும் இதற்காக கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியது. அதனை கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து குருவாயூர் கோவில் நிர்வாகம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் ஏற்கனவே உள்ள 3 திருமண மண்டபங்களுடன்

கோவில் நடை பந்தலில் கூடுதலாக 2 திருமண மண்டபங்கள் அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.மேலும் 21-ந் தேதி திருமணம் செய்து கொள்ள விரும்புவோரின் முன்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது, என்றும் அறிக்கையில் கூறியிருந்தது.

இதுபோல குருவாயூர் நகராட்சியும், திருமண பதிவுக்காக விடுமுறை நாட்களிலும், நகராட்சி அலுவலகத்தில் கூடுதல் ஊழியர்களை நியமனம் செய்துள்ளதாக கூறியுள்ளது.

அவர்கள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் இறுதியில் இன்று 245ஜோடிகள் குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories