
கனியாமூர் சக்தி மெட்ரிக்பள்ளி தாளாளர் உள்ளிட்ட இந்த 5 பேருக்கும் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை 13ம் தேதி இறந்தார்.
இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 5 பேரும் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், பள்ளி தாளாளர் உள்ளிட்ட இந்த 5 பேருக்கும் ஜாமின் வழங்கி நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.





