December 6, 2025, 4:48 AM
24.9 C
Chennai

அயோத்தி ராமர் கோவில் அடுத்த ஆண்டு முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி..

500x300 1753284 ayodhya ram temple - 2025

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுமான பணி 40 சதவீதம் முடிந்துள்ளது. இது கடவுள் காரியம் என்பதால், பணத்துக்கு தட்டுப்பாடு இல்லை. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சுப்ரீம் கோா்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அயோத்தியில் முகாமிட்டுள்ள அவர், கரசேவக புரத்தில் தங்கி இருக்கிறார். தினந்தோறும் கட்டுமான பணிகளை மேற்பார்வையிடுவதுடன், அதன் முன்னேற்றம் குறித்து கூட்டங்கள் நடத்தி ஆய்வு செய்து வருகிறார். சம்பத் ராய் கூறியதாவது:- கோவில் கட்டுமான பணி மற்றும் கோவிலை சுற்றி உள்ள சாலைகளை மேம்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

40 சதவீத கட்டுமான பணி முடிந்துள்ளது. 80 சதவீத பீட பணி முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இது கடவுள் காரியம் என்பதால், பணத்துக்கு தட்டுப்பாடு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். கோவில் பணிமனையில், கோவில் கட்டுமானத்துக்கான கற்களை செதுக்கும் பணியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக ராமர் கோவிலில் சாமி கும்பிட வருபவர்கள், அந்த இடத்துக்கும் சென்று பார்ப்பது வழக்கமாக உள்ளது. கற்களை தொட்டு கும்பிடுவதுடன், புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்கள்.

இதுதொடர்பாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை அதிகாரிகள் கூறியதாவது:- ராமர் கோவில் ஆயிரம் ஆண்டுகளை தாண்டி நிலைத்திருக்கும் வகையில் மண்ணில் பிரமாண்டமான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் கருவறைக்குள் பயன்படுத்த ராஜஸ்தான் மாநிலம் மக்ரானா மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மார்பிள்கள் பயன்படுத்தப்படும். மார்பிள்கள் செதுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. செதுக்கப்பட்ட மார்பிள் கற்கள் ஏற்கனவே அயோத்திக்கு வந்து விட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர். ராமர் கோவிலை சுற்றி உள்ள 70 ஏக்கர் நிலத்தில், சீதை, லட்சுமணன், விநாயகர், சபரி, ஜடாயு, வால்மீகி ஆகியோருக்கும் கோவில்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், புகழ்பெற்ற அனுமன்காரி கோவிலுக்கு செல்லும் சாலை அகலப்படுத்தப்படுகிறது. அதற்காக வழியில் உள்ள கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. முதலில், இதற்கு எதிர்ப்பு எழுந்தபோதிலும், தற்போது உள்ளூர் மக்கள் தாங்களே முன்வந்து தங்கள் கடைகளையும், வீடுகளையும் இடிக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories