குமரியில் ராகுல் பாதயாத்திரையை துவங்கி வைக்கும் மு.க.ஸ்டாலின் …

தமிழகத்தில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை 4 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் யாத்திரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் பாதயாத்திரையின் போது ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

காங்கிரஸ் கட்சி கடந்த 2014 மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது. இதுபோல பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாததே தேர்தல் தோல்விக்கு காரணம் என கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் கட்சி பணியில் ராகுல்காந்தி மூத்த நிர்வாகிகளின் ஆலோசனையை கேட்பதில்லை எனவும் கூறினர்.

இதையடுத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த சூழலில் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், ராகுல்காந்தி நாடு தழுவிய பாதயாத்திரை நடத்த முடிவு செய்தார். இந்த பாதயாத்திரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை தொடங்குகிறது. 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3 ஆயிரத்து 750 கி.மீட்டர் தூரத்திற்கு அவர் நடைபயணம் செல்கிறார்.

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து பாதயாத்திரை தொடங்குகிறது. முன்னதாக கன்னியாகுமரியில் காங்கிரஸ் பொதுக்கூட்டமும் நடக்கிறது. இதில் ராகுல்காந்தி பேசுகிறார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி கன்னியாகுமரியில் 7-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார். அன்று ஒரே மேடையில் இருவரும் பங்கேற்று பேசுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரசார் செய்து வருகின்றனர். பின்னர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வரை மூன்றரை கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் பாதயாத்திரை செல்கிறார். தமிழகத்தில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

முதல் நாள் யாத்திரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் பாதயாத்திரையின் போது ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். அவர்கள் ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் நடந்து செல்வார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி முதல் நாள் பாதயாத்திரையை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நிறைவு செய்கிறார். இரவு அங்கேயே தங்குகிறார். மறுநாள் (8-ந்தேதி) காலை அங்கிருந்து கொட்டாரம், சுசீந்திரம் கோட்டாறு வழியாக நாகர்கோவிலில் உள்ள ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரிக்கு சென்றடைகிறார். அங்கு இரவு தங்குகிறார். 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை அங்கிருந்து புறப்பட்டு முளகுமூடு சென்றடைகிறார். இரவு அங்கு தங்குகிறார். 10-ந்தேதி (சனிக்கிழமை) காலையில் அங்கிருந்து புறப்பட்டு இரவு செருவாரக்கோணத்தில் தங்குகிறார். 11-ந்தேதி காலையில் அங்கிருந்து புறப்பட்டு கேரள மாநிலம் செல்கிறார். குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்வதையடுத்து தமிழக காங்கிரசாரும் குமரி மாவட்ட காங்கிரசாரும் அதற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள். பாதயாத்திரை செல்ல உள்ள பாதைகள் விவரம் உத்தேசமாக தயாரிக்கப்பட்டு விட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்பட உள்ளது.

ராகுல் காந்தி பாத யாத்திரை செய்யவுள்ள இடங்கள் இறுதி செய்யப்பட உள்ளதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி 2-வது முறையாக அடுத்த வாரம் குமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளவும் திட்டமிட்டு உள்ளார். பாதயாத்திரை தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

images 2022 08 29T143921.089 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories