கேரளா ஆலப்புழாவில் 68வது படகு பந்தயப்போட்டி நாளை புன்னமடா ஏரியில் துவக்கம்..

images 96 - 2026

கேரளாவில் பிரபலமான ஆலப்புழாவில் இந்த ஆண்டு ‘ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர்’ என்று அழைக்கப்படும் 68வது படகு பந்தயப்போட்டி புன்னமடா ஏரியில் நாளை செப் 4ல் நடைபெற உள்ளது.

உலக அளவில் பிரசித்தி பெற்றது, கேரளாவில் நடைபெறும் படகுப்போட்டிகள். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னமடா ஏரியில் நடைபெறும் நேரு டிராபி படகுப்போட்டியை காண உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவது வழக்கம்.

அதிலும் இங்கு நடைபெறும் பாம்பு படகுகள் 150 அடி நீளமுள்ள படகில் சுமார் 100 துடுப்பு மனிதர்களால் இயக்கப்படும் இந்த அணிவகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். புகழ்பெற்ற இந்த படகு போட்டி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு ‘ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர்’ என்று அழைக்கப்படும் 68வது பந்தயப்போட்டி புன்னமடா ஏரியில் நாளை ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஏராளமான படகு குழாம் கழகங்கள் தயாராகி உள்ளன. இதுவரை 20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள் பங்கேற்க பதிவு செய்துள்ளன.

நாளை மதியம் 2.30 மணிக்கு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் போட்டியை தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவுக்குப் பிறகு, போட்டிகள் 3 மணிக்குத் தொடங்குகிறது. ஹீட் சுற்றுகள் தலா 4 அணிகளுடன் நடத்தப்படும். இதில் முதலாவதாக வரும் அணிகள் இறுதிப்போட்டியில் போட்டியிடும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் பாம்பு படகுக்கு நேரு கோப்பை வழங்கப்படுகிறது. தற்போது வரை டிக்கெட் விற்பனை ரூ.23 லட்சத்தை எட்டியுள்ளது. இது ரூ. 50 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியை காண ஏராளமானோர் கேரளா வந்துள்ளதால் போட் ஹவுசுகள், ஓட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் நிறைந்துள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்க தலா ரூ.80 லட்சம் வரை படகு குழாம்கள் செலவழிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories