தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிலிண்டரை புக் செய்வதில் பிரச்சினை நிலவுவதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். பிரச்சினை சரி செய்யப்பட்டு வருவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய எண்ணெய் நிறுவனம் ஐபிஎம் என்ற முறையில் இண்டேன் வாடிக்கையாளர்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான முன்பதிவுகளை பெற்று சிலிண்டர்களை வினியோகித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக முன்பதிவு மற்றும் வினியோக முறையில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து இந்திய எண்ணெய் நிறுவனம், ஐபிஎம் மற்றும் ஆரக்கிளுடன் இணைந்து கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி, 77189-55555 என்ற எண்ணுக்கு குரல் பதிவு மூலம் முன்பதிவு செய்யலாம். அல்லது 84549-55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் அல்லது இந்த எண்ணில் நேரடியாக பேசியும், 75888-88824 வாட்ஸ்-அப் மூலமும், வினியோகஸ்தர்களின் தொலைபேசி எண் மற்றும் நேரடியாக சென்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் முன்பதிவு பதிவு செய்யப்படும்.
முடிந்தவரை விரைவில் சிலிண்டரை உங்களுக்கு வழங்குவோம். விரைவில் சிக்கலைத் தீர்த்துவிடுவோம் என்று நம்புகிறோம், இதனால் நாளை (இன்று) முதல் உங்கள் அழைப்புகளை ஏற்று வழக்கம் போல் சேவை செய்யப்படும். திடீரென கணினி செயலிழப்பால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முதன்மை பொதுமேலாளர் சந்தீப் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.