ஞானவாபி வழக்கு விசாரணைக்கு உகந்ததே-வாரணாசி நீதிமன்றம் ..

1760756 gyanvapi mosque - 2026

ஞானவாபி கள ஆய்வின்போது, மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ஞானவாபி மசூதி வக்பு வாரிய சொத்து என்பதால் இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என வாதம் செய்த நிலையில் ஞானவாபி வழக்கு விசாரணைக்கு உகந்தது என வாரணாசி நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றததில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதை அடுத்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு மசூதி வளாகத்தில் 3 நாட்கள் வீடியோ ஆய்வு பணிகளை நடத்தியது. அப்போது, இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அஞ்சுமன் இன்டெஜமியா மஸ்ஜித் கமிட்டி வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்து பெண்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுக்கலாமா? என்பதை வாரணாசி மாவட்ட நீதிமன்றமே விசாரித்து முடிவு செய்யலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்தன. மஸ்ஜித் கமிட்டி தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஞானவாபி மசூதி வக்பு வாரிய சொத்து. எனவே, இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை. மசூதி தொடர்பான விவகாரத்தை வக்பு வாரியம் மட்டுமே விசாரிக்க உரிமை உண்டு,’ என்றார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘கோயிலை இடித்துவிட்டுதான் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது,’ என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், தீர்ப்பை ஒத்திவைத்தார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது முஸ்லிம் அமைப்பு தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். ஞானவாபி மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்துவதற்காக இந்து மத பெண்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது எனக் கூறிய நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார். தகுதியின் அடிப்படையில் வாதங்கள் நடைபெறும் என நீதிபதி கூறினார். இந்த உத்தரவை எதிர்த்து, இஸ்லாமிய தரப்பு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. தீர்ப்பையொட்டி வாரணாசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories