கிட்னியை திருடிய காதல் கணவன்..

877936 odisha - 2026

தன்னுடைய கிட்னியை திருடிய 2வது திருமணம் செய்த காதல் கணவனின் செயலை 4 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடித்தார் முதல் மனைவி . இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோத அகதியாக ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டம் கட்டமீத்தா கிராமத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்தவர் பிரசாந்த் (வயது 34). இவர் அந்த கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதாவை காதலித்து கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சிதாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. உடனே அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்திருக்கிறார். அப்போது அங்கு அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சோதனை முடிவில் ரஞ்சிதாவின் ஒரு கிட்னி காணாமல் போயிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதாவுக்கு, அப்போது தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு அறுவை சிகிச்சை நினைவுக்கு வந்திருக்கிறது. கணவரின் கட்டாயத்தின் பேரில் நடந்த அந்த அறுவை சிகிச்சையில் கிட்னி திருடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த ரஞ்சிதா பிரஷாந்திடம் விசாரித்திருக்கிறார். அந்த விசாரணையில் மனைவி ரஞ்சிதாவுக்கே தெரியாமல் அவரது கிட்னியை கணவர் பிரசாந்த் திருடி விற்றிருக்கிறார். பிரசாந்த் வேலை வெட்டிக்கு செல்லாமல் நாட்களை கழித்து வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவருக்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் தான் கிட்னியை விற்றால் பணம் கிடைக்கும் என்ற ரகசிய தகவல் பிரசாந்துக்கு தெரிய வந்துள்ளது. அப்போது ரஞ்சிதாவுக்கும் அடிக்கடி வயிற்று வலி ஏற்படவே, உடனே அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பிரசாந்த் கிட்னியில் கல் இருப்பதாகவும் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

கணவன் தன் மீது அளவில்லாத அன்பு வைத்திருப்பதாக நினைத்து ரஞ்சிதாவும் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொண்டிருக்கிறார். திட்டப்படி ரஞ்சிதாவுக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. மருத்துவர்கள் உதவியுடன் கல்லை எடுப்பதாக கூறி ஒரு கிட்னியை எடுத்துள்ளார் பிரசாந்த். சிகிச்சைக்கு பிறகு கிட்னியை விற்று நிறைய பணம் பெற்றுக்கொண்டு அந்த பணத்தை வைத்து பெங்களூரில் வேறு ஒரு பெண்ணுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வந்திருக்கிறார்.

இதை அறிந்த மனைவி ரஞ்சிதா பிரசாந்தை கைது செய்ய கோரி ஆதாரங்களோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பெங்களூரில் இருந்த பிரசாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories