427 பெருமாள் திருமுகத்துடன் பட்டுச்சேலை தயாரிப்பு..

500x300 1768502 kanchi0000 - 2026

காஞ்சிபுரத்தில் குமரவேலு- கலையரசி தம்பதியினர் 427 பெருமாள் திருமுகத்துடன் கைத்தறி நெசவில் பட்டுச்சேலை தயாரித்துள்ளனர்.பெருமாளின் திருமுகம், ரெங்கநாதர் லட்சுமி தேவியுடன் இருப்பதை 8 நாட்களில் இரவு பகலாக வேலை பார்த்து அழகிய பட்டுச் சேலையை தயாரித்து உள்ளனர்.வாடிக்கையாளர் வேண்டுகோளின்படி பட்டுச்சேலையில் பெருமாளின் திருமுகங்களையும், முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் மற்றும் லட்சுமி தேவியை வடிவமைத்து பாராட்டு பெற்றனர்.

காஞ்சிபுரம், விளக்கொளி பெருமாள் கோவில் தோப்புத் தெருவில் வசிப்பவர் குமரவேலு. இவரது மனைவி கலையரசி. இவர்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை பட்டு சேலையில் வடிவமைத்து கைத்தறியில் நெசவு செய்து வழங்கி வருகின்றனர். இவர்களிடம் சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், 3-வது ஆண்டாக திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவில் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வித்தியாசமாக பட்டுச் சேலை தயாரித்து வழங்க கேட்டுக்கொண்டார்.

வாடிக்கையாளர் வேண்டுகோளின்படி பட்டுச்சேலையில் பெருமாளின் திருமுகங்களையும், முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் மற்றும் லட்சுமி தேவியை வடிவமைக்க முடிவெடுத்தனர். அதன்படி குமரவேலு- கலையரசி தம்பதியினர் பெருமாளின் திருமுகம், ரெங்கநாதர் லட்சுமி தேவியுடன் இருப்பதை 8 நாட்களில் இரவு பகலாக வேலை பார்த்து அழகிய பட்டுச் சேலையை தயாரித்து உள்ளனர். தங்க ஜரிகை இழைகளால் நெசவு செய்யப்பட்ட இந்த பட்டுச்சேலை 21½ முழம் நீளத்தில், ஒரு கிலோ 386 கிராம் எடையில் உள்ளது.

அதில் மொத்தம் 427 பெருமாளின் திருமுகங்களும், பார்டரில் 27 ஜோடி யானைகளும் உள்ளன. முந்தானையில் ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் படுத்திருக்கும் ரெங்கநாதரும், காலடியில் வீற்றிருக்கும் மகாலட்சுமியும், நாபியில் இருந்து வளரும் தாமரைப் பூவில் பிரம்மாவும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் உற்சவர் உருவமும் ஜரிகை இழைகளால் கலை நயத்துடன் தயாரிக்கப்பட்டு உள்ளது. திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாளுக்கு வாடிக்கையாளரால் வழங்கப்படும் இந்த பட்டுச் சேலையை விரதம் இருந்து நெசவு செய்ததாக நெசவு தொழிலாளி குமரவேலு-கலையரசி தம்பதியினர் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories