சிபிஐ அதிரடி: நாடு முழுவதும் 115 இடங்களில் சோதனை; 16 பேர் கைது

cbi raid - 2026

இந்தியாவில் பதுங்கி சர்வதேச அளவில் கைவரிசை காட்டும் சைபர் கிரைம் கும்பலை பிடிக்க பன்னாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. நாடு முழுவதும் 115 இடங்களில் நடந்த சோதனையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகம் முழுவதும் மோசடிகளை அரங்கேற்றும் சைபர் கிரைம் கும்பல் சர்வதேச புலனாய்வு அமைப்புகளுக்கு கடும் சவாலாக உள்ளன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களும் விதவிதமான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஒரு நாட்டில் இருந்துகொண்டு மற்றோரு நாட்டில் உள்ளவர்களை மோசடி வலையில் வீழ்த்தி பெரும் அளவில் பணத்தை சுருட்டும் சைபர் கிரைம் கும்பல் மீது பன்னாட்டு புலனாய்வு அமைப்புடன் இணைந்து சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில் இந்தியாவில் பதுங்கியிருந்து சர்வதேச அளவில் கைவரிசை காட்டும் பன்னாட்டு சைபர் கும்பலுக்கு எதிராக சிபிஐ அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இண்டர்போல் தவிர அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் தனியார் புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சிபிஐ மேற்கொண்ட இந்த வேட்டைக்கு ஆபரேஷன் சக்ரா என பெயரிடப்பட்டுள்ளது.

டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், அசாம், கர்நாடகா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவு உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ளூர் காவல்துறை ஒத்துழைப்புடன் இந்த சோதனை நடைபெற்றது. இந்தியாவில் உள்ள சர்வதேச கும்பல்களின் உள்கட்டமைப்பை சிதைத்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதை நோக்கமாக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.

இது இணைய குற்றங்களுக்கு எதிரான ஒரு ஒருங்கிணைப்பு நடவடிக்கை என்றும் அது முக்கிய மைல்கல்லை எட்டி இருப்பதாகவும், சிபிஐ தெரிவித்துள்ளது. சுமார் 115 இடங்களில் சோதனை நடந்து வருவதாக தெரிவித்த சிபிஐ இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அவர்களிடம் இருந்து 1.8 கோடி ரூபாய் ரொக்கம், 1.5 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புனே மற்றும் அகமதாபாத்தில் செயல்பட்ட 2 கால்செண்டர்களும் சிபிஐயால் கண்டுபிடிக்கப்பட்டது. பலரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதோடு கைதானவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப், உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் எந்தெந்த நாடுகளில் பதுங்கி சர்வதேச அளவில் சைபர் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதை கண்டறிந்து அதன் அடிப்படையில் சர்வதேச கூட்டு நடவடிக்கையை தொடர சிபிஐ முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் மூலம் உலக அளவில் நாள்தொறும் 1 லட்சம் பேருக்கு 9000 பேர் வீதம் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் ஆண்டு தோறும் 71.1 மில்லியன் பேர் சைபர் குற்றங்களுக்கு ஆளாகின்றனர். அவர்கள் இழக்கும் தொகையின் சுமார் 318 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories