நாசிக்கில் கண்டெய்னர் லாரி மீது பேருந்து மோதி 12 பேர் பலி..

maharashtra bus accident1 - 2026
images 36 - 2026

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கண்டெய்னர் லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டியத்தில் நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற பஸ் ஒன்று இன்று அதிகாலை 5 மணியளவில் லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பஸ் தீப்பிடித்து கொண்டது. தீ மளமளவென பஸ் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால், பஸ்சுக்குள் சிக்கி கொண்ட பயணிகள் வெளியே வர முடியாமல் பரிதவித்தனர். இந்த விபத்தில் மற்றும் தீயில் சிக்கி 12 பயணிகள் உயிரிழந்து உள்ளனர்.

அவர்களில் ஒரு குழந்தை மற்றும் 11 பெரியவர்கள் அடங்குவார்கள். 32 பேர் வரை காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பஸ் தீ பிடித்து எரிந்தது பற்றிய தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றுள்ளனர்.

தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. பேருந்தில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே அறிவித்துள்ளார். 

பிரதமர் மோடியும் இந்த விபத்துக்கு குறித்து கேட்டறிந்து இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நாசிக் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின்  குடும்பத்தாருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரமும் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

IMG 20221008 112119 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories