December 8, 2025, 8:57 AM
22.7 C
Chennai

உலக பெண் குழந்தைகள் தினம் இன்று..

கடந்த 2012-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மூலம், அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக உருவாக்கப்பட்டது. பெண் குழந்தைகளை இன்னமும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்த உருவாக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளால் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை ஆறாவது ஆண்டு பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

பிறந்த குழந்தை முதற்கொண்டு கற்பழிக்கப்பட்டு வரும் அவலத்தை நாம் தினமும் காண்கிறோம். கல்வி, வேலை, திருமணம் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் அளவில்லாதவை. வளர்ந்த நாடுகள் முதல் வளராத நாடுகள் வரை அனைத்திற்கும் இது பொருந்தும். எனவே, பெண் குழந்தைகளை கொண்டாடுவதற்காகவே இந்த தினம் உள்ளது.

images 45 - 2025

இன்று 11 அக்டோபர் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் ஆண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் எந்தவொரு சுதந்திரமும் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுவது இல்லை என்ற சூழல் இன்றளவும் நிலவுகிறது. அடுப்பங்கரையில் அடைப்பட்டிருந்தவள் ஆகாய விமானத்தை இயக்குகிறாள்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் உயிர்கள் தோன்றிட உறவுகள் மலர்ந்திட உரிப்பொருளாக விளங்குபவள் பெண் என்னும் பேராற்றல். அப்பாவிற்கு தேவதையாகவும், அம்மாவிற்கு தெய்வமாகவும், சகோதரர்களுக்கு செல்லமாகவும் வலம் வரும் பெண் குழந்தைகளை கொண்டாடும் வகையில் 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதியை‌ சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக ஐ.நா.சபை அறிவித்தது.

இன்றைய காலகட்டங்களில் அவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை களைவதோடு, அவர்களை ஊக்குவித்து கவுரபடுத்தும் விதமாக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்த போதே கள்ளிப்பால் கொடுத்து அதனை அழிக்க தொடங்கிய பெண் சிசுக்கொலை ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் எங்கோவோர் இடத்தில் நடந்து கொண்டு இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. சமூகத்தில் நிலவி வரும் பாலின சமத்துவமின்மை காரணமாக பெண் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளும், அத்தியாவசிய தேவைகளும் ஒடுக்கப்படுகின்றன. ஆண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் எந்தவொரு சுதந்திரமும் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுவது இல்லை என்ற சூழல் இன்றளவும் நிலவுகிறது.

இது தவிர பெண் குழந்தைகளுக்கு எதிரான குழந்தை திருமணம் என்ற கொடுமையான நிகழ்வு இன்றும் இருப்பது மனவேதனை தரும் செய்தியாகும். நாகரிகம் வளர்ந்தாலும் இன்றைய சூழலில் குழந்தை திருமணம் நடைபெற்று கொண்டிருப்பது அவர்களின் உரிமை பறிக்கப்படுவதன் அடையாளமாகவே கருதப்படுகிறது.

பல ஆண்டுகள் நடந்த போராட்டங்களின் விளைவாக தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிரான ஒடுக்கப்படும் சூழல்கள் மாறி வருகின்றன. அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் தடையின்றி வந்தடைகிறது‌. வீட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணும் இப்போது ஒலிம்பிக்கில் கோப்பையை வெல்கிறாள். அடுப்பங்கரையில் அடைப்பட்டிருந்தவள் ஆகாய விமானத்தை இயக்குகிறாள்‌. இவையெல்லாம் பாலின சம உரிமை ஊக்குவிப்பதாக இருந்தாலும்கூட, இக்காலத்தில் அவர்கள் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படும் அவலநிலை பெருகி வருகிறது. பருவ நிலை அடைந்த பெண்ணை விட, சின்னஞ்சிறு குழந்தைகள்கூட பாலியல் வன்மத்தால் சிதைக்கப்படுகிறார்கள்.

பள்ளி செல்லும் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யும் மிருகத்தனமான மனிதர்களால், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதா? அல்லது வீட்டிலே பாதுகாப்பதா? என்ற சிந்தனைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பல ஆண்டுகளாக போராடி வாங்கிய உரிமைகள் பறிக்கப்பட்டு மீண்டும் பிற்போக்கான சமுதாயத்தில் பெண் குழந்தைகள் அடைக்கப்பட்டு விடுவார்களோ என்ற அச்சமான சூழ்நிலை நிலவி வருகிறது. இத்தகு கொடுமையான நிகழ்வுகளை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அப்போதுதான்‌ இந்த நிலை மாறும்‌, பெண் குழந்தைகளின் எதிர்காலமும் வளம்பெறும் என்பது முற்றிலும் உண்மை. இத்தகைய தடைகளையும், கொடுமைகளையும் தாண்டி வளர்ந்து வரும் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு உறுதுணையாகவும் இருந்திட இந்நாளில் நாம் உறுதியேற்போம்.

IMG 20221011 113047 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories