கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலியா? தீவிரமடையும் போலீஸ் விசாரணை ..

500x300 1775407 keralaman1 1 - 2026
HS.jpeg - 2026

கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மட்டும் 15 பெண்கள் மாயமாகியுள்ள நிலையில்.மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவும் திடுக்கிடும் தகல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் கேரளா பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கேரள சாலைகளில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த பத்மா, கலடி பகுதிகளைச் சோ்ந்த ரோஸிலின் ஆகியோர் கடந்த ஜூன் மாதத்திலும், செப்டம்பரிலும் காணாமல் போனதாக வந்த புகாா்கள் மீது போலீஸாா் விசாரணை நடத்தியபோது, அவா்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் தெரியவந்தது.

செல்வம் பெருக நரபலி கொடுக்க வேண்டும் என்று பெரம்பவூரைச் சோ்ந்த முகமது சஃபி என்பவா் கூறியதைக் கேட்டு, திருவல்லாவைச் சோ்ந்த பகவல் சிங் – லைலா தம்பதி, அவா்களின் வீட்டில் வைத்து அந்த இரு பெண்களையும் கொலை செய்து, எலந்தூா் கிராமத்தில் புதைத்துள்ளனா்.காவல்துறை விசாரணையில், முக்கிய குற்றவாளியான சஃபி மற்றும் தம்பதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், சஃபி மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருப்பதால், வேறு யாரையாவது நரபலி கொடுத்துள்ளாரா என்ற கோணத்தில் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணையை முடுக்கியுள்ளனர்.கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மட்டும் 15 பெண்கள் மாயமாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பத்மாவும், ரோஸிலினும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12 பேரின் நிலை இதுவரை மர்மமாகவே இருக்கிறது.

அந்த 12 பெண்களையும் சஃபி நரபலி கொடுத்திருக்க வாய்ப்புள்ளதாக கருதும் காவல்துறையினர் விசாரணையை முடுக்கியுள்ளனர். மேலும், சஃபி உள்ளிட்ட மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவெடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் நரபலி விவகாரத்தை கவனித்து வரும் நிலையில், மேலும் 12 பெண்கள் குறித்த மர்மம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PTI10 11 2022 000260B - 2026

இந்த நிலையில் கணவரை கொன்று மந்திரவாதியுடன் சேர்ந்து வாழ லைலா திட்டமிட்டமிட்டதாகவுமு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பத்தில் போலீசார் மந்திரவாதி முகமது ஷபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை கைது செய்துள்ளனர். 2 பெண்களை கொலை செய்த மந்திரவாதி முகமது ஷபி வேறு யாரையும் இதற்கு முன்பு கொலை செய்துள்ளாரா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் முகமது ஷபியும், லைலாவும் சேர்ந்து லைலாவின் கணவர் பகவல் சிங்கை கொலை செய்ய ரகசிய திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் இன்று கூறியதாவது:- பகவல் சிங்கை எப்படியும் செல்வந்தர் ஆக்கி விடுவேன் என்று முகமது ஷபி அவரிடம் உறுதியாக கூறியுள்ளார். இதனை பகவல் சிங் முழுமையாக நம்பி, முகமது ஷபி கூறிய அனைத்தையும் செய்ய தயாராகி உள்ளார். அதன்படி பகவல் சிங்கின் மனைவி லைலாவுடன் கணவர் கண்முன்பே முகமது ஷபி உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் லைலாவுக்கு கணவரை விட மந்திரவாதி முகமது ஷபியின் நெருக்கம் பிடித்து போனது. இதையடுத்து அவர்கள் இருவரும் பகவல் சிங்கை கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கான நேரத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தபோதுதான் அவர்கள் நரபலி வழக்கில் சிக்கி கொண்டனர். இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர். முகமது ஷபி மற்றும் லைலாவை காவலில் எடுத்து விசாரிக்கும்போது இது தொடர்பாக மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories