கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் நரபலி விவகாரம் சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழு அமைப்பு..

HS.jpeg 1 - 2026

கேரள மாநிலத்தில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழுவை அமைத்து மாநில காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

பத்தினம்திட்டா மாவட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண் உள்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

இவ்வழக்கில், கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான மந்திரவாதி முகமது சஃபி வேறு யாரையாவது நரபலி கொடுத்துள்ளாரா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், கொச்சி துணை ஆணையர் எஸ். சசிதரன் தலைமையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. தலைமை விசாரணை அதிகாரியாக உதவி காவல் கண்காணிப்பாளர் அனுஜ் பலிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அனுமதியை ஓரிரு நாள்களில் நீதிமன்றத்தில் பெறவுள்ளனர்.

கேரளத்தில் சாலைகளில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த பத்தினம்திட்டா மாவட்டம் கதவன்தாரா மற்றும் கலடி பகுதிகளைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் கடந்த ஜூன் மாதத்திலும், செப்டம்பரிலும் காணாமல் போனதாக வந்த புகாா்கள் மீது போலீஸாா் விசாரணை நடத்தியபோது, அவா்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட ரோஸிலின் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பத்மா
செல்வம் பெருக நரபலி கொடுக்க வேண்டும் என்று பெரம்பவூரைச் சோ்ந்த முகமது சஃபி என்பவா் கூறியதைக் கேட்டு, திருவல்லாவைச் சோ்ந்த மசாஜ் சிகிச்சையாளரான பகவல் சிங் மற்றும் அவருடைய மனைவி லைலா இருவரும், அவா்களின் வீட்டில் வைத்து அந்த இரு பெண்களையும் கொலை செய்து, எலந்தூா் கிராமத்தில் புதைத்துள்ளனா்.

காவல்துறை விசாரணையில் நரபலி கொடுத்தவர்கள் மனித மாமிசம் சாப்பிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா். அவா்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகேட்டு நீதிமன்றத்தில்  போலீஸாா் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்ற நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் 12 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து கொச்சியில் புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் காவல் ஆணையா் நாகராஜு கூறியதாவது:

இந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவு மூலமாகவே துப்புதுலங்கியது. கொலை செய்யப்பட்ட பெண்களில் ஒருவரை முகமது சஃபி தனது காரில் ஏற்றுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தை வைத்து காவல் துறையினா் மேற்கொண்ட தொடா் விசாரணையில், இந்த கொலை சம்பவத்தின் முழு விவரமும் வெளிவந்தன.

முக்கியக் குற்றவாளியான சஃபி மீது ஏற்கெனவே திருட்டு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் 10-க்கும் அதிகமான வழக்குகள் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 75 வயது மூதாட்டியை சஃபி பாலியல் துன்புறுத்தல் செய்து, அவரது உடலின் பல பகுதிகளில் கத்தியால் காயங்களை ஏற்படுத்திய வழக்கும் அடங்கும். தற்போது எலந்தூரில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் உடலிலும் அதேபோன்ற காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சஃபி அடிப்படையில் வக்கிர புத்தி உடையவா். பெண்களிடம் ஏதாவது கதையைச் சொல்லி, அவா்களை தனது வலையில் விழவைத்து பின்னா் அவா்களைத் துன்புறுத்தி வந்துள்ளாா் என்றாா் ஆணையர் நாகராஜு.

500x300 1775951 255 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories