போடி அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற மூவர் பலி..

images 2022 10 16T181024.014 - 2026

போடி அருகே திருமண விருந்துக்காக தாய் மாமா வீட்டிற்கு வந்திருந்த தம்பதியினர் பெரியாற்று கோம்பை ஆற்றில் குளிக்க சென்ற பொழுது தவறி விழுந்து புதுமண தம்பதியர் உட்பட மூவர் உயிர் இழந்துள்ளனர். 

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த சஞ்சய் வயது 24  முன்னாள் ராணுவ வீரரின் மகனான இவர் லண்டனில் பணிபுரிந்து வருகிறார்.இவரது தாய் மாமா தேனியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கோயம்புத்தூரைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தது.திருமணத்தன்று லண்டனில் இருந்த சஞ்சய் தாய்மாமா கல்யாணத்துக்கு வர முடியாத காரணத்தினால் போடியில் உள்ள வீட்டில் விருந்திற்காக இருவரையும் அழைத்துள்ளார்.

இன்று காலை போரில் அருகாமையில் உள்ள  பெரியாற்று கோம்பை ஆற்றில் குளிப்பதற்காக புதுமண தம்பதியரை அழைத்துச் சென்றுள்ளார் உடன் சித்தி மகன் பிரணவ் என்ற சிறுவனையும் அழைத்து சென்றுள்ளனர்.

போடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரியாற்றுக் கோம்பை ஆற்றில் உள்ள பதினெட்டாம்படி கேணியில் குளிக்க நால்வரும் இறங்கிய பொழுது பாறையில் வழிக்கி நால்வரும் ஆற்றில் விழுந்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நால்வரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சிறுவன் பிரணவ் மட்டும் கரையேறி அருகாமையில் உள்ள  ஒத்தக்கடை ராமராஜிக்கு தகவல் அளித்துள்ளார்.

ராம்ராஜ் காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூவரின் உடலையும் மீட்டனர்.காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் முடிந்த ஒரே மாதமான தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் போடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

theni news - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories