December 12, 2025, 6:06 AM
22.7 C
Chennai

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்..

இன்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை சட்டசபையிலிருந்து வெளியேற்றியும் சிலர் அவைக்காவலர்களால் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனால், நேற்றைய சட்டசபை கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஆனால் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார். அவர் எதிர்கட்ச்சி துனைத்தலைவர் இருக்கையில் அமந்ர்திருந்தார். இந்நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்திற்கு தற்போது வருகை தந்தனர்.

சஞஇந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்து சபாநாயகர் அப்பாவு-வை சந்தித்தனர். அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து எதிர்கட்சி துணைத்தலைவர் பதவி தொடர்பாக பேசினர். இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க ஓ. பன்னீர் செல்வம் வந்தார். அவர் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் எடப்பாடி பழனிசாமி அருகில் அமர்ந்தார். இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் அவையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அவர்கள் அவர்களிடம் உங்களுக்காக நேரம் தருகிறேன் கேள்வி நேரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள் எனக் கூறினார்.ஆனால் அதை ஏற்காத அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

gallerye 105453976 3148844 - 2025

இதையடுத்து 2ம் நாள் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர்இன்று தொடங்கியது; பேரவையை நேற்று புறக்கணித்த நிலையில் இன்று அவைக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி அவையில் ஓ.பன்னீர் செல்வம் அருகே அமர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. முன்னதாக எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை சந்தித்த பிறகு சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். இருக்கை தொடர்பாக முடிவெடுக்கக்கோரி சட்டசபை கூட்டம் தொடங்கியதுமே அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். முதலில் மக்கள் பிரச்சினை குறித்து பேச அனுமதியுங்கள் பிறகு நேரம் தருகிறேன் உங்கள் கேள்வியை எழுப்புங்கள் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் சபாநாயகர் அப்பாவு கேட்டு கொண்டார். கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கிறேன். சபையின் மாண்பை குலைக்க அனுமதிக்க மாட்டேன்.

உங்கள் நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என சபாநாயகர் கூறினார்.

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். தீர்ப்பு வந்த உடன் அ.தி.மு.க. விவகாரம் குறித்த முடிவை சொல்கிறேன். தொடர்ந்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இருக்கைக்கு செல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.”கலகம் செய்யும் நோக்கில் வந்துள்ளீர்களா? ஒரு மணி நேரம் நடக்கும் கேள்வி நேரத்தில் இடையூறு செய்யக்கூடாது. எதிர்க்கட்சி தலைவர் விதியை மீறுகிறார்;இருக்கைக்கு செல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்தி எதிர்ப்பு தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றபட உள்ளது என்பதை தெரிந்து கொண்டு யாருக்கோ பயந்து இவ்வாறுச் எயல்படுகிறீர்கள் ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுவதால் பழனிசாமி தரப்பு அச்சமடைந்து உள்ளீர்கள். அம்க்கள் பிரச்சினையை பேச மறுக்கிறீர்கள்.

நீங்கள் திட்டமிட்டே கலகம் செய்ய நினைத்து வநதுள்ளீர்கள். எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை சட்டசபையிலிருந்து வெளியேற்ற அவை காவலர்களுக்கு உத்தரவு பிறபித்தார். இதை தொடர்ந்து சபை காவலர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை சட்டசபையிலிருந்து வெளியேற்றினர். சிலர் அவைக்காவலர்களால் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.

images 2022 10 18T111555.901 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

Topics

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

தென்காசி டூ காசி… அகத்திய முனிவரின் 9 நாள் வாகனப் பயணம்!

அகத்திய முனிவரின் வாகனப் பயணம் 9 நாள் யாத்திரையை வெற்றிகரமாக முடித்து காசியை அடைந்தது.

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

Entertainment News

Popular Categories