
செங்கோட்டை அருகே புளியரை எஸ் வளைவில் மினி லாரியும் லாரியும் மோதிக்கொண்டதில் இரண்டு பேர் படுகாயம் சுமார் 30 அடி உயரத்தில் இருந்து சரக்கு லாரி கவிழ்ந்து தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை அருகே S வளைவு உள்ளது.இந்த எஸ் வளைவு தான் தமிழகத்தில் இருந்து புளியரை வழியாக கேரளா செல்வதற்கான பாதையாகும். இந்த வழியில் இன்று கேரளாவில் இருந்து நெல்லையை நோக்கி வந்த சரக்கு லாரியும் தென்காசியில் இருந்து கேரளாவை நோக்கி சென்ற லாரியும் புளியரை அருகே உள்ள எஸ் வளைவில் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டதுஇதில் சரக்கு லாரி நிலை தடுமாறி சுமார் 30 அடி பள்ளத்தில் கீழே ரயில்வே தண்டவாளத்தில் விழுந்தது.இதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் படுகாயம் அடைந்த இருவரையும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் செங்கோட்டை- கேரளா-செங்கோட்டை ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்