December 7, 2025, 12:31 AM
25.6 C
Chennai

தஞ்சையில் மாமன்னர் ராஜராஜசோழன் 1037-வது சதயவிழா கொண்டாட்டம்:

Tamil News large 3161012 - 2025

தஞ்சை பெரியகோவிலில் மாமன்னர் ராஜராஜசோழன் 1037-வது சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் இன்று காலை யானை மீது திருமுறைகள் வைத்து வீதிஉலா வந்தபோது திரளான பக்தர்கள் வந்து தரிசித்து சென்றனர்.

தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அணிவித்து மரியாதை செலுத்தினார்‌‌. பெரிய கோவிலில் பெருவுடையார் மற்றும் பெரிய நாயகி அம்மனுக்கு பால், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது. தஞ்சாவூர்: சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் ராஜராஜ சோழன்.

இவர் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்தார். இவரது பிறந்தநாள் சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 1037-வது சதய விழா இரண்டு நாள் அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். நேற்று முதல் நாள் விழா நடைபெற்றது. ராஜராஜ சோழன் பிறந்த சதய நட்சத்திரமான இன்று 2-ம் நாள் விழா தஞ்சை பெரிய கோவிலில் தொடங்கியது. இதற்காக இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. முதலில் அரண்மனை தேவஸ்தானம் நிஷாந்தி மற்றும் ஆறுமுகம் குழுவினரின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இதையடுத்து கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார். தொடர்ந்து யானை மீது திருமுறைகள் வைக்கப்பட்டு 4 ராஜவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அடியார்கள், ஓதுவார்கள் திருமுறை பாராயணம் பாடியப்படி வீதி உலா வந்தனர். அப்போது பழங்கால கொம்பு உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்தபடி வந்தனர். இதில் பெரியகோவில் உருவம் பொறித்த பிரமாண்ட மாதிரி அரங்கம் வாகனத்தில் வைக்கப்பட்டு வீதி உலாவில் பின்தொடர்ந்து வந்தது.

gallerye 101653357 3161012 1 - 2025

இதையடுத்து பெரிய கோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சதயவிழாக்குழு தலைவர் து.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்கம், கட்சிகள், அமைப்பு சார்பில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஏராளமானோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து பெரிய கோவிலில் பெருவுடையார் மற்றும் பெரிய நாயகி அம்மனுக்கு பால், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் தலைமையில் நடந்த இந்த பேரபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற்றது. மாலையில் மங்கள இசை, குரலிசை நிகழ்ச்சி, திருமுறை பண்ணிசை அரங்கம், திருநெறிய தமிழிசை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சதயவிழாவை முன்னிட்டு பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன் சிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை மாநகரம் விழாக்கோலம் பூண்டது.

955238 untitled 1 - 2025
gallerye 101638482 3161012 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories