December 6, 2025, 11:39 PM
25.6 C
Chennai

T20 WC 2022: நேர்மையற்ற கணக்கு

t20wc - 2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பேமானிக் கணக்கு… அப்படித்தான் சொல்ல வேண்டும். பதினாறு அணிகளைக் கொண்டு கடந்த அக்டோபர் பதினாறாம் தேதி முதல் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

சூப்பர் 12 சுற்றிற்கு நேரடியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய எட்டு அணிகள் தேர்வு பெற்றன. மீதமுள்ள 4 அணிகள் இலங்கை வெஸ்ட் இண்டீஸ் ஸ்காட்லாந்து அயர்லாந்து நெதர்லாந்து நமிபியா யுஏஇ ஜிம்பாப்வே ஆகிய எட்டு அணிகள் விளையாடிய தகுதி சுற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதில் அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள், ஆஸ்திரேலியா நியூசிலாந்து இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் இடம் பெற்றுள்ள ஒன்றாவது குழுவில் நுழைந்தன.

ஜிம்பாவே மற்றும் நெதர்லாந்து அணிகள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இடம்பெற்ற இரண்டாவது குழுவுக்குள் நுழைந்தன. இந்த நிலையில் பிரதான சுற்று ஆட்டங்கள் 75% மேல் முடிந்த நிலையில் ஒன்றாவது குழுவில் நியூசிலாந்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் அரை இறுதிக்கு செல்லும் இரண்டு அணிகளுக்கான இடத்திற்கு போட்டியிடுகின்றன.

அதேபோல் இரண்டாவது குழுவில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கான இரண்டு இடங்களுக்காக போட்டியிடுகின்றன.

இதில் தென் ஆப்பிரிக்க அணிக்கு அடுத்து பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் தலா ஒரு போட்டி இருக்கிறது. தற்போது தென் ஆப்பிரிக்க அணி ஐந்து புள்ளிகள் உடன் இருக்கிறது.

இந்திய அணிக்கு அடுத்து ஜிம்பாப்வே அணி உடன் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டி மீதம் இருக்கிறது.

தற்பொழுது இந்திய அணி 6 புள்ளிகளுடன் இருக்கிறது.என்ன நடக்கலாம்? பாகிஸ்தான் அணிக்கு நாளை தென்னாபிரிக்க அணியுடனும் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் அணியுடனும் இரண்டு போட்டிகள் இருக்கிறது.

தற்பொழுது பாகிஸ்தான் அணி இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளது.சீனரியொ-1 இந்திய அணி தனது கடைசி போட்டியில் ஜிம்பாப்வே அணி உடன் தோற்று, பாகிஸ்தான் அணி தனது இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்க அணி தனது கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்க அணி 7 புள்ளிகள் உடனும், இந்தியா பாகிஸ்தான் அணிகள் தலா ஆறு புள்ளிகளுடனும் இருக்கும்.

இதில் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணி அதிக ரன் ரேட்டில் இருந்தால் பாகிஸ்தான் அணியும் தென் ஆப்பிரிக்கா அணியும் அரை இறுதிக்கு முன்னேறும்.

சீனரியொ-2 நாளை தென்னாபிரிக்கா அணியுடனோ, ஞாயிறு பங்களாதேஷ் அணியுடனோ பாகிஸ்தான் அணி தோற்றாலோ, இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை வென்றாலோ, இந்திய அணி சுலபமாக அரையிறுதிக்குள் நுழைந்து விடும்

சீனரியொ-3 அதே சமயத்தில் பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தி, இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இருக்கும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தான் அணியுடனும் நெதர்லாந்து அணியுடனும் தோல்வியைத் தழுவினால், இந்தியா பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

எப்படியிருக்கிறது பேமானிக் கணக்கு; அதாவது நேர்மையற்ற கணக்கு?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories