10 சத இட ஒதுக்கீடு தீர்ப்பு சரித்திரப் புகழ் வாய்ந்தது – அண்ணாமலை..

Tamil News large 3099765 - 2026

பொருளாதார அடிப்படையில் பின்தங்கி கஷ்டபடுகிறவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது. இதனால் யாருக்கும் எங்கேயும் எந்தவிதமான பாதிப்பும் கிடையாது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் .

சென்னையில் பிரதமர் மோடி குறித்த புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது: “பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். பாரத பிரதமர் கொண்டு வந்திருக்கிற இந்த 10 சதவீத உள் ஒதுக்கீடு நிச்சயமாக செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை பாஜக மனதார வரவேற்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதுமே ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் போகும். மறைந்த முதல்வர் எம்ஜிஆர் சட்டநாதன் கமிஷனை கொண்டு வந்தபோது, திமுக விஷமத்தனமான பிரச்சாரம் செய்தது. அதேபோல், 2002-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை சட்டமன்றத்தில் 140 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டு சட்டமானது. அதை எதிர்த்தும் விஷமத்தனமான பிரச்சாரம் செய்யப்பட்டது.

இன்றைக்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தும் ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீடு வந்தால், ஏற்கெனவே இட ஒதுக்கீடு சலுகை பெறுபவர்களுக்கு எல்லாம் பாதிப்பு, குறிப்பாக ஓபிசி பிரிவில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் பாதிப்பு என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், அதுபோல எதுவுமே கிடையாது.

மத்திய அரசு யார் யாருக்கெல்லாம் இடஒதுக்கீடு சலுகை ஏற்கெனவே வழங்கியிருக்கிறார்களோ, அவர்களுடைய உரிமைகள் எதுவும் இந்த தீர்ப்பால் பறிபோகாது. தமிழகத்தைப் பொறுத்தவரை பி.சி., எம்.பி.சி., உள்ஒதுக்கீடு நிலையாக மாறாமல் அப்படியே இருக்கும். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல், எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கான உள்ஒதுக்கீட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இதை காலம் காலமாக சொல்லி வந்தாலும், இதனை எதிர்த்து தமிழகத்தில் திமுக ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தை கையிலெடுத்து உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தங்களையும் இணைத்து கொண்டனர்.

பொருளாதார அடிப்படையில் பின்தங்கி கஷ்டபடுகிறவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இதனை கொண்டு வந்துள்ளது. இதற்கு பல வரையறைகளையும் மத்திய அரசு விதித்துள்ளது. இதனால் யாருக்கும் எங்கேயும் பாதிப்பு கிடையாது. உச்ச நீதிமன்றம் சரித்தரப் புகழ் வாய்ந்த இந்த தீர்ப்பின் மூலம் அதை அங்கீகரித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது” என்று அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories