தமிழகத்தில்  6.18 கோடி வாக்காளர்களில் பெண்களே அதிகம்:

894717 - 2026

வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா “தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 பேர் மொத்த வாக்காளர்கள். இதில் ஆண்கள் 3 கோடியே 3 லட்சத்து,95 ஆயிரத்து 103 பேர், பெண்கள் 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 758 பேர் உள்ளனர். தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்” என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

சென்னையில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இரண்டு பிரதிகள் வழங்க இருக்கிறோம். இது மாநில தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

நவ.9 முதல் டிச.8-ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலர்களிடமும் படிவங்கள் 6, 7 மற்றும் 8 ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அவர்களிடம் வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம். தேர்தல் ஆணைய இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.

இன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி, மாநிலத்தில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 பேர் மொத்த வாக்காளர்கள். இதில் ஆண்கள் 3 கோடியே 3 லட்சத்து,95 ஆயிரத்து 103 பேர், பெண்கள் 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 758 பேர் உள்ளனர். தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் 17.69 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

நவ.9 முதல் டிச.8-ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் 4 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நவ.12, நவ.13, நவ.26 மற்றும் நவ.27 ஆகிய நாட்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களின்போது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். அதேபோல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான படிவம் 6-பி மூலம் ஆதார் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலில் தமிழகம் சிறப்பாக உள்ளது. பல மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வாக்காளர் பட்டியல்களில் தங்களது பெயர்களை சேர்த்துள்ளனர். இதுவரை 56.09 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories