ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளம்.. சிக்கியவர்கள் மீட்பு ..

IMG 20221112 174455 - 2026
ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்ட போது
IMG 20221112 WA0108 - 2026
ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்ட போது

தமிழக கேரளா வனப்பகுதி பெரியார் புலிகள் சரணாலயம் பகுதியில் பெய்த மழையால் ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அய்யனார் கோவில் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கரைக்கு அப்புறம் உள்ளவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது அய்யனார் கோவில் இக்கோவிலுக்கு செல்லும் வழியில் நீரோடை ஒன்று உள்ளது. மழை நேரங்களில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் இந்த ஓடையை கடந்து செல்வது மிக சிரமமான காரியமாகும்.

இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரம் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அய்யனார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கும் நீரோடையில் குளிப்பதற்காகவும் சென்று இருந்தனர்.

மாலையில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அய்யனார் கோவில் நீரோடையில் வழக்கத்தை விட அதிகமாக நீர்வரத்து ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக கோவில் பகுதி மற்றும் குளிப்பதற்காக சென்றவர்கள் கரைக்கு வர முடியாமல் தவித்தனர்.

இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து அக்கரையில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை பத்திரமாக கயிறு கட்டி மீட்டனர். விபரம் குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, வட்டாட்சியர் சீனிவாசன் தலைமையிலான குழு மூலம் வெள்ளத்தில் சிக்கிய சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் மீண்டநிலையில் யாரேனும் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனரா என தீயணைப்பு வீரர்கள் கண்காணித்து வருகின்றனர்.இரவு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories