வீராங்கனை மரணம்-2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் – மா. சுப்பிரமணியன்..

Tamil News large 3170825 - 2026

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்த விவகாரத்தில், கவனக்குறைவாக நடந்து கொண்டதாக புகாரின் பேரில் 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா(17) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை, வியாசா்பாடியை சோ்ந்தவா் ரவிக்குமாா். அவரது மகள் பிரியா (17) சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப் பிரிவில் படித்து வந்தார். மேலும், கால்பந்து போட்டியில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்.

பிரியா மரணம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், மூட்டு அறுவை சிகிச்சை நடந்த போது போடப்பட்ட கட்டு காரணமாக பிரியாவின் உடலில் ரத்த ஓட்டம் தடைபட்டது. மருத்துவர்களின் கவனக்குறைவே பிரியாவின் மரணத்துக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. கவனக்குறைவாக இருந்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். பிரியாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories