குற்றாலம் மெயினருவி, சிற்றருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு..

WhatsApp Image 2022 11 05 at 10.jpeg 1 - 2026

குற்றாலம் மெயினருவி, சிற்றருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு இருந்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தென்காசி, ஆய்க்குடி, சிவகிரி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி நகர் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை வரை சாரல் மழை விட்டு விட்டு பெய்து. அங்கு அதிகபட்சமாக 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

செங்கோட்டையில் 12.8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்துள்ளது. கடனா அணை நீர்மட்டம் 70 அடியையும், ராமநதி அணை நீர்மட்டம் 71 அடியையும் எட்டி உள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதியில் 51.84 அடிநீர் இருப்பு உள்ளது.

குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தடை விதிக்கப்பட்ட நிலையில் நேற்று பகல் முழுவதும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் நேற்று மாலையில் பெய்த பலத்த மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் இரவில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் இன்று காலையிலும் மெயினருவி, சிற்றருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு இருந்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீரின் ஆக்ரோஷம் குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை முதல் தென்காசி பகுதியில் வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டுள்ளது. மாலை நேரம் போல அப்பகுதி காட்சியளித்தது.இன்று மழை இல்லாமல் போனால் பிற்பகுதியில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories