December 8, 2024, 8:54 AM
26.9 C
Chennai

ஏழை மக்கள் பயன்பெறும் திட்டங்களை திமுக அரசு கைவிட்டதுதான் சாதனை -இபிஎஸ்..

ஏழை மக்கள் பயன்பெறும் திட்டங்களை அனைத்தையும் திமுக அரசு கைவிட்டு விட்டதுதான் திமுகவின் சாதனை என்று சிதம்பரம் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக், திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்ட ஏழை மக்கள் பயன்பெறும் திட்டங்கள் அனைத்தையும் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக அரசு கைவிட்டு வருகின்றன என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அன்று நிவாரணப் பொருள்களை வழங்கி பேசினார்.

அவர் பேசுகையில் வடகிழக்கு பருவமழை ஆரம்ப கட்டத்திலேயே கனமழை பெய்து கடலூர் மாவட்டத்திலே பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக பொறுத்தவரை ஆளும் கட்சியாக இருந்த போதும் மக்களுக்கு சேவை செய்தோம். எதிர்கட்சியாக இருக்கும் போதும் மக்களுக்கு சேவை செய்கின்ற ஒரே இயக்கம் அதிமுகதான். ஏனென்றால் இந்த இயக்கம் தோற்றுவித்ததே ஏழைகளுக்காகதான். எம்ஜிஆர் ஏழை மக்கள் நலம் காக்கவும், துண்பம், வேதனைகளை போக்குவதற்காக அதிமுகவை தோற்றுவித்தார்கள்.

அடுத்த வந்த ஜெயலலிதா, எம்ஜிஆர் விட்டு சென்ற பணியை தொடர்ந்து செயல்படுத்தினார். நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடன் கலைந்து உதவிகளை செய்தார். அவர்களுடைய வழியில் அதிமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆகவே டெல்டா மாவட்டத்தை பொறுத்த வரை, கடலூர் மாவட்டம் எப்போதெல்லாம் பருவ மழை காலங்கள் வருகிறதோ, அப்போதெல்லாம் இப்பகுதியில் கனமழை பெய்து வெள்ளத்தால் பாதிக்கப்படு வருகிறார்கள். வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பதற்கு எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, நான் முதல்வராக இருந்த காலத்திலும் சரி, பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து வடிகால் வசதிகளை செய்து மழை நீர், வெள்ளநீர் வடிகின்ற சூழலை உருவாக்கி தந்துள்ளோம்.

ALSO READ:  இம்முறை சபரிமலை நிலக்கல் பார்க்கிங் கட்டணம் எவ்வளவு…?

கடலூர் மாவட்டத்தில் ம.ஆதனூர்- குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.500 கோடியில் கதவணை கட்டி கொடுத்துள்ளோம். கதவணை மூலமாக மக்களுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு நிறைய திட்டங்களை தந்துள்ளோம். எப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் வேதனைகளை மீட்டெடுக்கும் வகையில் உதவிகளை செய்துள்ளோம்.

கடந்த காலத்தில் வறட்சி ஏற்பட்ட போது வறட்சி நிவாரணம் வழங்கியுள்ளோம். விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிர் கடன்களை ஜெயலலிதா தள்ளுபடி செய்தார். அதன் பிறகு கரோனா தொற்று காலத்தில் விவசாயிகள் வருமானம் குறைந்து அல்லல்பட்டிருந்த போது விவசாயிகளுக்கு மீண்டும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 5 ஆண்டுகளில் இரு முறை பயிர்கடன்களை தள்ளுபடி செய்த அரசு ஜெயலலிதா அரசு.

ஏழை எளிய மக்கள், விவசாய தொழிலாளிகள் பசுமை வீடுகள், ஆடு, மாடு, கோழி வளர்க்கும் திட்டங்களை கொண்டு வந்தோம். அம்மா மினி கிளினிக் என்ற அற்புதமான திட்டத்தை கிராமப்புறங்களில் கொண்டு வந்தோம். 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் அத்தனையும் திமுக அரசு மூடிவிட்டு நகர்ப்புற மருத்துவமனைகளை தொடங்கியுள்ளது. ஏழை மக்கள் பயன்பெறும் திட்டங்கள் அனைத்தையும் ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக அரசு மூடிக்கொண்டிருந்கின்றன.

ALSO READ:  நவராத்திரி திருவிழா; முப்புடாதி அம்மன் திருவீதி உலா!

அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் உள் ஒதுக்கீடு 7.5 சதவீதம் கொண்டு வந்தோம். இந்த ஆண்டு இந்த ஒதுக்கீட்டில் 565 பேருக்கு தேர்வு செய்யப்பட்ட, செலவில்லாமல் மருத்துவம் பயின்று வருகின்றனர். பொங்கல் தொகுப்பு நாங்கள் கொடுத்தோம். திமுக ஆட்சியில் மிக மோசமான பொருள்களுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும் வகையில் மடிக்கணினி கொடுத்தோம். இந்த அரசை அதையும் நிறுத்திவிட்டது. இன்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக கைவிட்டு வருகிறார்கள். திருமண உதவி திட்டம், அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் அனைத்தையும் கைவிட்டு விட்டார்கள் என்றார் இபிஎஸ்.

முன்னதாக சிதம்பரம் எல்லையில் எடப்பாடி கே.பழனிசாமியை, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலளர் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

ALSO READ:  மதுரை: வளர்பிறை பஞ்சமி; அறிவுத் திருக்கோயில் திறப்பு!
author avatar
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week