சபரிமலைக்கு 10முதல் 50வயது உட்பட அனைத்து பெண்களும் செல்ல அனுமதிக்க வேண்டும்.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி செயல்பாடு இருக்கவேண்டும் என கேரளா அரசு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன.
உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை. பின்னர், உத்தரவுக்கு எதிர்ப்பு மற்றும் கொரோனா பரவல் காரணமாக இதுவரை அமல்படுத்தப்படாமல் இருந்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது.