காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் பலி..

images 82 1 - 2026

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் பனி அடர்ந்த மலைப்பிரதேசம் வழியாக இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு செல்கிறது. அங்கு அடிக்கடி பனிச்சரிவு நிகழ்ந்து வருகிறது.

இதில் ராணுவ வீரர்கள் அவ்வப்போது சிக்குவது உண்டு. அந்தவகையில் நேற்று அங்கு நடந்த பனிச்சரிவு ஒன்று 3 ராணுவ வீரர்களின் உயிரை பலி கொண்டிருக்கிறது. அதாவது, எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே உள்ள குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட மாச்சில் செக்டாரில் ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள் படைப்பிரிவினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு திடீரென கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர். இதில் 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இது எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பனிச்சரிவு குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உயிரிழந்த 3 வீரர்களின் உடல்களையும் மீட்டனர். அவர்களின் விவரம் குறித்து உடனடியாக தகவல் இல்லை.

இந்த சம்பவம் குறித்து குப்வாரா மாவட்ட மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாச்சில் செக்டாரில் பணியில் இருந்த 3 ராணுவ வீரர்கள், ஒரு துரதிர்ஷ்டவசமான பனிச்சரிவில் சிக்கி உயிர்த்தியாகம் ெசய்து உள்ளனர்’ என தெரிவித்தார். பனிச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் காஷ்மீர் எல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories