இன்று குரூப்-1தேர்வு எழுதிய 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர்..

Published:

1794051 tnpsc - 2026

இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குரூப்-1 முதல் நிலைத் தேர்வை 3.25 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கு இந்த தேர்வு நடந்தது காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் இந்த தேர்வு நடந்தது.

துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டு இருந்தது.

முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் முதல்நிலைத் தேர்வு இன்று சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்காக 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், அதில் 2 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு, 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வை எழுத தகுதியுள்ளவர்களாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இன்று காலை 9.30 மணி க்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் துவங்கிய இத்தேர்வு பிற்பகல் 12.30 மணி வரையில் இந்த தேர்வு நடைபெற்றது.

பொதுப்பாடம் பிரிவில் 175 வினாக்கள் திறனறிவு பிரிவில் 25 வினாக்கள் என 200 வினாக்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்கள் என்ன மாதிரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்? என்பது தொடர்பான முழு விவரங்களை ஹால்டிக்கெட்டில் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்திருந்தது.பலர் ஆர்வத்துடன் தேர்வை எழுதினர்.

தமிழக அரசு துறைகளில், குரூப் – 1 நிலையில் உள்ள துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட, 92 காலி பணியிடங்களை நிரப்ப‌ இந்த முதல்நிலை தகுதி தேர்வு நடைபெற்றது .

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் என, 38 பிரதான தேர்வு மையங்கள் நிர்ணயிக்கப்பட்டு, அவற்றில், 5,000க்கும் மேற்பட்ட தேர்வறைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

காலை 9:30 மணி முதல், 12:30 மணி வரை தேர்வு நடந்த இந்த தேர்வில், 175 கேள்விகள் பட்டப் படிப்பு தரத்திலும், 25 கேள்விகள் 10ம் வகுப்பு தரத்திலும் இடம் பெற்றது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

துணை கலெக்டர் 18; டி.எஸ்.பி., 26; உதவி கமிஷனர் 25; கூட்டுறவு துணை பதிவாளர் 13; ஊரக மேம்பாட்டு துறை உதவி இயக்குனர் ஏழு; மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மூன்று என, 92 காலியிடங்கள் இந்த தேர்வின் வழியே நிரப்பப்பட உள்ளன.
தேர்வில் தேர்ச்சி பெறுவோர், அடுத்து நடக்க உள்ள பிரதான தேர்வுக்கும், அதில் தேர்ச்சி பெறுவோர், நேர்காணலுக்கும் தேர்வு செய்யப்படுவர்.

குரூப் – 1 தேர்வுக்கு, மாவட்டம் முழுதும் பல பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இன்று பள்ளிகளுக்கு மாற்று வேலைநாள் என்பதால், குரூப் – 1 தேர்வு மையம் உள்ள பள்ளிகள் மட்டும், தேர்வு முடிந்த பின், 12:30 மணிக்கு மேல் பிற்பகலில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2 பருவ இடை தேர்வும் பிற்பகலில் நடத்தப்பட உள்ளது. குரூப் – 1 தேர்வு பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பதில், மாற்று ஆசிரியர்கள் வழியே பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
Tamil News large 317426420221119050143 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img