தஞ்சை பெரிய கோவிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம், பிரதோஷம்..

Published:

images 92 - 2026

தஞ்சாவூர் பெரிய கோவிலில்
கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.

கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கார்த்திகை மாத முதல் சோமவாரமான இன்று தஞ்சாவூர் பெரிய கோவிலில், பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

TN 20221121180934564733 - 2026

இதனையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. மேலும், இதே நாளில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், திரவிய பொடி உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சோமவார தினத்தில், பிரதோஷ வைபவம் என்பதால், அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல, வரும் 28ம் தேதி இரண்டாவது, டிசம்பர் 5ம் தேதி மூன்றாவது, டிசம்பர் 12ம் தேதி நான்காவது சோமவாரம் நடைபெறுகிறது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!
TN 20221121180934564733 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img