சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் வசதிக்காக எர்ணாகுளம் -தாம்பரம்-எர்ணாகுளம் இடையே புனலூர் செங்கோட்டை ராஜபாளையம் தஞ்சாவூர் மயிலாடுதுறை வழியாக தென்காசி விருதுநகர் மாவட்டம்,டெல்டா மாவட்டங்களையும், கேரள பகுதிகளையும், இணைத்து சபரிமலை சிறப்பு வண்டி இயக்கப்படுகிறது.இதற்கான முன் பதிவு விரைவில் துவங்கி நடைபெறும்
வண்டி எண்: 06068
எர்ணாகுளத்தில் இருந்து திங்கள்தோறும் கிளம்பி தாம்பரத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்று சேரும்.வண்டி எண்: 06067
தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை தோறும் கிளம்பி புதன்கிழமை எர்ணாகுளம் சென்று சேரும்.
டெல்டா பிரதான பகுதி மாவட்டங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இந்த சிறப்பு வண்டியை பயன்படுத்தி புனலூர் ரயில் நிலையத்தில் இறங்கினால் அங்கிருந்து பம்பையை எளிதாக அடையலாம்.மேலும் ஐயப்பன் படைவீடு கோயில் காளான் குளத்துப்புழா ஆரியங்காவு அச்சன்கோவில் எருமேலி க்கு எளிதில் செல்லலாம்.
மேலும் புனலூர் இரயில் நிலையத்தில் இருந்து நேரடியாக பம்பை செல்வதற்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.விரிவான தகவல்கள் மற்றும் கால அட்டவணை படத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
28-நவம்பர்-22
முதல் 03-ஜனவரி-23 வரை இந்த சிறப்பு வண்டி 6 முறை இயக்கப்படும்.மொத்தம் 14 பெட்டிகளுடன் இந்த சபரிமலை சிறப்பு வண்டி இயங்கும்.எர்ணாகுளம்-தாம்பரம்(06068),தாம்பரம்-எர்ணாகுளம்(06067) வண்டிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தினால் தொடர்ந்து இந்த ரயில் நீடிப்பு செய்யப்படலாம்.
சபரிமலை செல்லும் யாத்திரிகர்கள் இந்த சிறப்பு இரயில் சேவையை பெருமளவு பயன்படுத்தி பயனடையலாம்.விரைவில் முன்பதிவு விரைவில் துவங்கும்.