மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.175.80 கோடியில் பறக்கும் பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வெளியீடு
மதுரை மாநகர் பகுதியில் அழகர்கோவில் ரோடு மாநகராட்சி அலுவலகம் எதிரே புது நத்தம் ரோடு பாலம் துவங்குகிறது.
அதனருகே பறக்கும் பாலம் துவங்கி தமுக்கம், கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பு அருகே தாழ்வாக செல்லும் வகையில் அமைக்கப்படும். அங்கிருந்து ஏ.வி.பாலம் அருகே இணையானமற்றொரு தனி பாலம் துவங்கி நெல்பேட்டை அண்ணாதுரை சிலையில் முடியும். பீ.பி.குளத்தில்இருந்து வரும் வாகனங்களுக்காக தமுக்கம் நேரு சிலை அருகே துணைப் பாலம், செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோடு நோக்கிச் செல்ல தேவர் சிலை அருகே தாழ்வாக மற்றொரு துணைப் பாலம் அமையும். வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் ஒருவழிப் பாதை பாலமாக அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 3.2 கி.மீ.,நீளம், 12 மீ.,நீளத்தில் ரூ.175.80 கோடியில் அமைக்க நெடுஞ்சாலைத்துறை டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் 20 தேதி வரை விண்ணப்பக்க கடைசி நாள் என்றும் அதன் பின் டெண்டர் இறுதி செய்யப்பட்டதும் 3 மாதங்களில் பணி துவங்கும் என தெரிவிக்கபட்டுள்ளது..