மகாகவி பாரதியாரின் நட்சத்திர பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி மகாகவியின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் ஆங்கில தேதி முறைப்படி, டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி கொண்டாடப்படும். இருப்பினும் பாரதியார் கார்த்திகை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதால், சிலர் அவரது நட்சத்திரப் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வழியில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியும் கார்த்திகை மாத மூல நட்சத்திரமான நவ.27 இன்று மகாகவி பாரதியின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ டிவிட்டர் பதிவில் வெளியிட்ட செய்திக் குறிப்பில்…
மகாகவி பாரதியாரின் கார்த்திகை மாதம் மூல நட்சத்திர பிறந்தநாளான இன்று அவரது திருஉருவப்படத்திற்கு ஆளுநர் ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பாரத மாதாவின் மகத்தான மகன் நம்மை என்றும் ஊக்குவிப்பான்… என்று குறிப்பிடப்பட்டிருந்தது.