அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ நடத்தும் இலவச விளையாட்டு பயிற்சி

we the leaders - 2026

கிராமப்புற மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட் ! இனி வாரா வாரம் இலவச விளையாட்டு பயிற்சி; முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை அவர்களது வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை மும்முரம்…

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சியில் வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இலவச கையுந்து பந்து பயிற்சிக்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், வீ தி லீடர்ஸ் அறக்கட்டளையின் முதன்மை சேவகருமான அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின் படி, வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை சார்பாக பல்வேறு இலவச பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது,

இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள நீதிமன்றம் எதிரே, கிராம புற மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்துவதற்காக, அரவக்குறிச்சி வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை சார்பாக, சுற்றியுள்ள கிராம புற ஏழை மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் இலவச கையுந்து பந்து (Volleyball ) பயிற்சியின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாணவ, மாணவிகள் பயிற்சியில் ஆர்வமுடன் பங்ககேற்றனர், இனி வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வாரா, வாரம் பயிற்சி நடைபெறும் என்று வீ தி லீடர்ஸ் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

we the leaders1 - 2026

மேலும், இந்த துவக்க விழா நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக சமூக ஆர்வலர்கள் நல்லசாமி, சிவகுமார், நாச்சிமுத்து, வழக்கறிஞர் ராம்குரு, முன்னாள் தலைமை ஆசிரியர் வீரமலை, பயிற்சியாளர் கௌதம், ராஜா மற்றும் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ந. பாஸ்கர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இப்பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள் 13 முதல் 21 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் பங்குபெற வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இந்த பயிற்சியானது முற்றிலும் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் நடக்கவிருக்கும் மாவட்ட, மாநில அளவிளான கையுந்து பந்து போட்டியில் கலந்து கொண்டு, அரவக்குறிச்சிக்கு மண்ணிற்கும், மக்களுக்கும் பெருமை சேர்ப்போம் என்று ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி மாணவ, மாணவிகள் உற்சாகமுடன் நம்பிக்கை தெரிவி்த்தனர், இவர்களை வீ தி லீடர்ஸ் அறக்கட்டளையினர் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories